விடுதலைப் புலிகளின் ஆயுதப் படகு நிர்மூலம்: இன்று அதிகாலையில் சம்பவம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்ததாக நம்பப்படும் பாரிய படகு ஒன்றினை இலங்கைக் கடற்படையினர் தாக்கியழித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று  அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கடற்பரப்பின் வடகிழக்காக 70 கடல் மைல் தூரத்தில் இந்தப் பாரிய படகு சென்று கொண்டிருந்ததை அவதானித்த கடற்படையினர் அதன் மீது தாக்குதலை நடத்தினர். இதன் காரணமாக அந்தப் படகு முற்றாகச் சேதமடைந்து கடலில் மூழ்கியது.

40 மீட்டர் வரை நீளம் கொண்ட இந்தப் படகில் பெருந்தொகையான யுத்த ஆயுதங்கள் இருந்ததாகவும் அந்த நிலையம் இன்று தெரிவித்தது.

இந்தப் பாரிய படகுக்குப் பாதுகாப்பு வழங்கிய மேலும் சில சிறிய படகுகள் மீதும் கடற்படையினர் தாக்குதலை நடத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply