20வது வருடங்களின் பின் மீள்குடியேறிய எள்ளுப்பிட்டி மக்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை பிரதேசத்திலுள்ள எள்ளுப்பிட்டி கிராமத்தில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் படைத்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் 54வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெறிறிருக்கும் விசேட கலந்துரையாடல் நேற்று இருபது வருடங்களுக்கு பின் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எள்ளுப்பிட்டி கிராமத்தில் இடம்பெற்றது.
இதன்போது படைத்தரப்பின் உயரதிகாரிகள், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் மன்னார் பிரதேசச் செயலாளர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 1990ம் ஆண்டில் இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 53 குடும்பங்களைச்சேர்ந்த 150ற்கும் மேற்பட்டவர்கள் இங்கு மீள்குடியேறியிருக்கின்றனர். இவ்வாறு மீள்குடியேறியவர்களுக்கு தேவையான அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை பிரதேசத்தின் படைத்தரப்பினர் மேற்கொண்டு வருவதாகவும் பிரதேசத்தில் மக்கள் தற்காலிகமாக குடியேற குடிசைகளை அமைத்தல் மற்றும் சிரமதான பணிகளில் இராணுவத்தினர் உதவிகளை மேற்கொள்வதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply