ஈழத்தமிழர்களுக்கு எரிக் சொல்யஹய்மின் பரிந்துரை!
நோர்வேப் பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் ஐ.நாவின் நியூயோர்க் அலுவலகத்தில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. ஐ.நா.வின் 65 ஆவது கூட்டத் தொடரில் பங்குபெற்ற வந்திருந்தபோதே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதிப்பிக்கின்றமை தொடர்பாக பரஸ்பரம் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
நோர்வே தரப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், சர்வதேச அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்யஹய்ம் ஆகியோரும் கலந்துகொண்டனர். எரிக் சொல்யஹய்ம் முக்கியமாக தெரிவித்துள்ளமை வருமாறு, இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம் அந்நாட்டுடன் கட்டாயம் நல்லுறவைக் கட்டியயழுப்ப வேண்டும். இலங்கையுடன் நல்லுறவைப் பேணும் நோர்வேயின் நகர்வு குறித்து இலங்கைத் தமிழர்கள் பலரின் அபிப்பிராயத்தை கேட்டிருந்தேன்.
அவர்கள் எமது இந்நகர்வுக்கு பேராதரவை வெளிப்படுத்தினர். ஜனாதிபதி மகிந்த ராஜ பக் சர்ச்சைக்குரிய ஒரு தலைவர் தான். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். மக்களின் பேராதரவையும் அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவர் அவர் என்பதை மாற்றுக் கருத்துக்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நோர்வேயுடன் நல்லுறவை பேணுகின்றமையில் பேரார்வமாகவுள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி மகிந்தவுடன் ஒத்துழைக்கின்றமையே அதற்கான ஒரேயொரு மார்க்கமாகவுள்ளது. தமிழர்கள் எதிர்காலத்தை சிந்தித்து செயற்படுதல் வேண்டும் ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்கி நடக்கவேண்டும் என்றார்.
இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டமை இங்கு நினைவுகோரத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply