தமிழ் மக்கள் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் – ஜனாதிபதி
தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்க அணி திரள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி வெகுவிரைவில் கைப்பற்றப்படும் எனவும், அதன் பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இந்தியாவிலிருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் இலங்கைக் கடற்பரப்பிற்குள் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் அத்து மீறி பிரவேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், கரையோரப் பகுதிகளில் பல்வேறு கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இதன் மூலம் வலுப்படக் கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் விரைவில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply