வவுனியா – பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் தரம் – 5 புலமைப் பரிசில் மூன்றாம் இடம்
பரீட்சை பெறுபேறுகள் வெளி வந்ததாக மட்டுமே முதலில் கேள்விப்பட்டேன். பின்னர் 190 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டேன் என்றதும் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
பரீட்சையை நல்லமுறையில் எழுதினேன். பெற்றோரினதும் பாடசாலை ஆசிரியருடைய அறிவுரைகளின் பிரகாரம் நடந்து கொண்டதினால் இந்த பெறுபேற்றை என்னால் பெறமுடிந்தது.
இவ்வாறு வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் தெரிவித்தார்.
சமயபுரத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் சிரானிதமயந்தி தம்பதிகளின் இரண்டாவது மகன். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவரின் தந்தையார் முச்சக்கரவண்டி சாரதி, நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பம் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரியநேசன் பணிவான மாணவன். ஒழுங்காக பாடசாலைக்கு வருவார். அவரிடம் பல திறமைகளை காணமுடிந்தது. அவரின் பரீட்சை பெறுபேறுகள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது என மாணவனுடைய வகுப்பாசிரியை திருமதி பிலோமினா பிரோம்குமார் தெரிவித்தார்.
5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்ற மாணவனுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதென குடும்ப தரப்பினர் தெரிவித்தனர்.
தேசிய ரீதியில் 3ம் இடத்தை பெற்ற வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவனை கெளரவித்து விருது வழங்க வவுனியா வர்த்தக சங்கம் முன்வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply