சாட்சிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்

யுத்தப் படிப்பினை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பு சாட்சியம் வழங்கியுள்ள வன்னி மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.

இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்பு வன்னி மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவப் பேச்சாளர் மறுதளித்துள்ள நிலையில், சாட்சியம் வழங்கிய மக்களின் பாதுகாப்பு தொடர்பில் தமக்கு அச்சம் எழுந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டங்களை நீட்டிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது தாம் அனுபவித்த துன்பத்தையும் தங்களின் கவலைகளையும் வெளியிட இந்த ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்குகிறது. அந்த ஆணைக்குழுவின் முன்பு மக்கள் தெரிவிக்கும் விடயங்களை பொய்யென்று வெளியில் கூறி இராணுவம் நிராகரிப்பது முறையல்ல. இராணுவத்தின் இந்த செயல் சாட்சியம் அளித்த மக்களுக்கு அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது” என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

தமது குடும்ப உறுப்பினர்கள் காணாமல்போனது பற்றியும் அவர்கள் கதி என்னானது என்று இதுநாள்வரை தெரியவராதுள்ளது பற்றியும் வன்னி மக்கள் பலர் ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply