அடுத்த அரசியல் அமைப்பில் மாற்றத்தில் மத்திய அரசின் கீழ் பொலிஸ் அதிகாரம்

13-வது அரசியல் அமைப்புத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட ஓரளவு பொலிஸ் அதிகாரங்களை அடுத்த அரசியல் அமைப்புத் திருத்த மூலம் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின்படி பொலிஸ் அதிகாரங்களில் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கும் ஒரு பகுதி மத்திய அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், மாகாண சபைக்கும் இது வரை பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை. அதே வேளை மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களிலும் உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தங்களில் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த அரசியல் அமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறை வேற்றப்படலாம் என அந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply