மன்னார் ஆயரின் முயற்சியின் பலனாக மீள்குடியமர்ந்தோருக்கு புதிய வீடுகள்
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கு உட்பட்ட சாலம்பன் பகுதியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு குடிமணைகள் நிர்மாணிக்கப்பட இருக்கும் நிலையில் இன்று சம்பிரதாய பூர்வமாக முதலாவது வீட்டிற்கான அடிக்கல் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலமையிலான குழுவினரால் நாட்டப்பட்டிருக்கின்றது.
கடந்த யுத்தத்தின் காரணமாக மேற்படி கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த பகுதியான கண்ணாட்டி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட சாலம்பன் பகுதியில் தற்போது மீள்குடியேறியிருக்கின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறிய சுமார் 55 குடும்பங்களதும் வீடுகள் யுத்தம் காரணமாக சேதமடைந்திருக்கின்றமை தொடர்பில் மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இவ்வீடுகள் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
குடும்ப உதவித்திட்டம் எனும் தொனிப்பொருளிளான சமூக வீடமைப்பு செயல் திட்டத்தின் ஊடாக முதல் தடவையாக சாலம்பன் பகுதியில் மீள்குடியேறியிருக்கும் குடும்பங்களுக்கு இவ் நிரந்தர வீடுகள் கிடைப்பதாக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணாண்டோ தெரிவித்திருக்கின்றார்.
சாலம்பன் பகுதியில் இடம்பெற்றிருக்கும் வீட்டிற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வின் செயலாளர், மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப் ஆண்டகை, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்கடர் சோசை உள்ளிட்ட அருட்தந்தையர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை 54வது படையனியின் சிவில் நிருவாக அதிகாரி கேணல் மாயாசிங்க, 541வது பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் முகாந்திரம், 542வது பிரிக்கேட்டின் சிவில் நிருவாக அதிகாரி கேணல் நலிந்த மகாவித்தாரண உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இது இவ்வாரிருக்க குறித்த பகுதியில் மீள்குடியேறியிருக்கும் மக்களது தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்ணாண்டோ மக்களிடம் இருந்தும், பிரதேசத்தின் இராணுவ அதிகாரிகளிடமிருந்தும் கேட்டறிந்திருக்கின்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply