இந்திய முதலீட்டாளர்களுடன் அமைச்சர் முரளிதரன் மட்டு. மாவட்ட மீன்பிடி பிரதேசங்களுக்கு விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்திச் செய்யும் வகையில் புன்னைக்குடா, களுவன்கேணி, மற்றும் பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அப்பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடினார்.

இந்திய முதலீட்டாளர்களும் அமைச்சருடன் வருகை தந்து இப்பிரதேச மீன்படித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அத்துடன் வாழைச்சேசையில் அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறைமுகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதனை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் வகையில் மீனவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் பொது அமைச்சின் அதிகாரிகள், இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply