வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

வவுனியா கூமாங்குளம்-நெலுங்குளம் பிரதான வீதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 
 
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மீட்கப்பட்ட சடலம் வவுனியாவைச் சேர்ந்த ஜீவரட்னம் புஷ்பராஜாவினுடையது (36) எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மாதக் குழந்தையொன்றின் தந்தையான புஷ்பராஜா, கொழும்பிலுள்ள தொழில்முகவர் நிலையமொன்றுக்கு வவுனியாவிலிருந்து ஆட்களை அனுப்பிவந்தவர் எனவும், கூமாங்குளம் பகுதிக்கு பணம் சேகரிப்பதற்காக நேற்று மாலை 4.45 மணியளவில் சென்றபோதே அவர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாகவும் வவுனியாப் பொலிஸார் கூறுகின்றனர்.

இவர் மீது மைக்கோ ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை சம்பவ இடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தடையங்களக் கொண்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை வவுனியாப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply