சர்வதேச ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை

வன்னியில் தற்பொழுது நடைபெற்றுவரும் நாலாம்கட்ட ஈழப் போர் இந்த வருடத்துடன் முடிவடைந்துவிடாது எனவும், 2009ஆம் ஆண்டும் மோதல்கள் தொடரும் எனவும் இராணுவ ஆய்வாளரான இக்பால் அதாஸ் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவு விரைவில் கைப்பற்றப்பட்டுவிடும் என பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகின்றபோதும், விடுதலைப் புலிகளும் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்திவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கும் புலிகளின் தளபதிகள், “தமிழ் மக்களைப் பாதுகாக்கும் இறுதிக்கட்டப் போர்” தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பாதுகாக்கப்படும் எனவும் கூறியிருப்பதாக இக்பால் அதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இராணுவத்தினரின் கடுமையான தாக்குதுல்களால் விரைவில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் பல சர்வதேச ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தாகவும், புலிகள் பதில் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அவர்கள் நாடு திரும்பியிருப்பதாகவும் இராணுவ ஆய்வாளரான இக்பால் அதாஸ் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply