புலிகளை ஒழித்ததில் படையினரின் தந்திரோபாயம்;உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்த அடுத்த வருடம் கொழும்பில் மாநாடு

புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட் டுவதற்காக இராணுவத்தினர் மேற்கொண்ட தந்திரோபாயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உலக நாடுகளுக்குத் தெளிவு படுத்துவதற்கான சர்வதேச மாநாடொன்று அடுத்த வருட முற் பகுதியில் இலங்கையில் நடாத்தப் படவிருக்கின்றது.இவ்வாறு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நேற்று முன்தினம் தியத்தலாவயில் தெரிவித்தார்.

இராணுவ உயரதிகாரிகள் 46 பேருக்கு இராணுவ பீட டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தியத்தலாவ பாதுகாப்பு அகடமியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பில் நடாத்தப்படும் இந்த சர்வதேச மாநாட்டின் மூலம் உலக நாடுகளின் பாராட்டுகளை இலங்கை மேலும் பெற்றுக் கொள்ளும்.

உலகில் சுமார் நூறு நாடுகள் பயங்கர வாதப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளன. அந்நாடுகளில் பயங்கரவாதப் பிரச்சினை பெரும் சவாலாக உள்ளன. பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இந்த நாடுகள் அழிவுகளையும் சேதங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவ்வாறான நாடுகளுக்கு இந்த சர்வதேச மாநாடு பெரிதும் நன்மை பயக்கும்.

புலிப் பயங்கரவாதிகள் கடந்த 30 வருடங்களாக முழு இலங்கையருக்கும் பெரும் தலையிடியினராக இருந்து வந்தனர். பெறுமதி மிக்க உயிர்களையும், சொத்துக்களையும் அழித்து வந்தனர். குரூரமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

உலகிலேயே கொடூர பயங்கரவாத அமைப்பாகவே புலிகள் இருந்து வந்தனர். அப் பயங்கரவாதத்தினையே, எமது நாட்டு இராணுவத்தினரால் முற்றாக அழிக்க முடிந்திருக்கின்றது.

எமது இராணுவத்தினர் பொது மக்களின் உயிர்ச்சேதத்தை தவிர்த்து பயங்கர வாதிகளையே இலக்கு வைத்து தாக்கி அழித்துள்ளனர். இராணுவ வெற்றிக்கு இலக்கு பொது மக்கள் அல்ல. பயங் கரவாதிகளே என்ற நிலையில், எமது இராணுவத்தினர் வெற்றிகரமாக செயல்பட்டனர்.

பங்கரவாதிகள் பொது மக்களை கேடயங்களாகப் பாவித்து இராணுவத் தினருடன் மோதிய போதிலும், எமது இராணுவத்தினர் தந்திரோபாயங்களை மேற்கொண்டு, பொது மக்களை மீட்டு, பயங்கரவாதிகளை அழித்துள்ளனர்.

யுத்தத்தில் வெற்றி கண்ட எமது இராணுவத்தினர், சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப் பினர்களுக்கு புனர்வாழ்வு அழித்து வருகின்றனர். பொது மக்களை மீள் குடியேற்றுதல் நிலக் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற மனித நேயக் கடமைகளையும் முன்னெடுத்துள்ளனர். இராணுவ ரீதியாகவும் வெற்றி பெற முடியும். அதே வேளை மனித நேயத் துடனும் செயற்பட முடியுமென்று, முழு உலக நாடுகளுக்குமே, எமது இராணுவத்தினர் உணர்த்தியுள்ளனர்.

புலி பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க நாம் பயன்படுத்திய தந்திரோ பாயங்களை உலக இராணுவத்தினர் அறிய விரும்புகின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடுத்த வருட முற்பகுதியில் இது தொடர்பான சர்வதேச மாநாட்டினை கொழும்பில் நடாத்தி, தெளிவுபடுத்தவுள்ளோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply