இலங்கை மக்களின் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது

இலங்கை மக்களின் எதிர்காலம் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடரும் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் எதிர்காலம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும். தற்பொழுது இலங்கையில் காணப்படும் இன, மத, மற்றும் மொழிப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் அரசாங்கம் உதவி செய்யும் என கனேடிய ஆளுநர் மைக்கல் ஜீன் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும், அவர்களுக்கான மனிதநேய உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply