யுத்தம் வேண்டாம்! எமக்கு சமாதானமே வேண்டும் !!
வன்னிப் பகுதியில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டு யுத்த கவசங்களாக பயன்படுத்தி வரும் அல்லல்பட்டு நிற்கும் மக்களை புலிகளின் கொடுங்கோல் அடக்குமுறைகளிலிருந்து விடுவிக்க சர்வேதச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி யாழ் தென்மராட்சிப் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் இன்று மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த மேற்படி பேரணியானது கைதடியிலிருந்து சாவகச்சேரிக்கு ஒரு பிரிவாகவும், கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரிக்கு மற்றுமொரு பிரிவாகவும் மக்கள் அணி அணியாக கலந்து கொண்டனர். இந்த பேரணியில் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டு, பிரபாகரனின் தனிப்பட்ட சுயலாப நோக்கங்களுக்காக பணயப் பொருளாக வன்னியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு பதாகைகளைத் தாங்கிச் சென்றனர்.
யுத்தம் வேண்டாம்! எமக்கு சமாதானமே வேண்டும் !!
பிரபாகரனே! இளைஞர்களையும், யுவதிகளையும், இளஞ்சிறார்களையும் உனது கொடிய யுத்த வெறிக்காக பலிக்கடாக்களாக பலி கொடுக்காதே!
போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தை அடைந்தது. காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்த கண்டனப் பேரணியில் 250 வாகனங்களும் ஊர்வலமாகச் சென்றது சிறப்பம்சமாகும். உணவுக் கப்பல் மீதான புலிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் உணர்வு பூர்வமான எதிர்ப்பினை பூரண ஹர்த்தால் மூலம் வெளிப்படுத்தியிருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply