வெளிநாட்டுச் சக்திகளின் விசாரணைகளை ஏற்கமாட்டோம்: அமைச்சர் பீரிஸ்
வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதõகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டாது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது. அதேவேளை, இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது எனவும் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளிலும் இராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது., இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.
பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்பு நோக்குவது பொருத்தமாகாது.
நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது.சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது. பொருளாதார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதியளவு தெளிவுபடுத்தப்படவில்லை எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் தெரிவித்தள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply