பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் : சம்பந்தன்
பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியமும், பௌதீக ஒருமைப்பாடும் கட்டிக்காக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அமையப்பெற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வுத் திட்டமொன்றை காண்பதற்கான அரசியல் நோக்கம் காணப்பட்டால் தீர்வினை எட்டுவது கடினமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் அவசியமானதென குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என அவர் அறிவித்துள்ளார். சில தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியுள்ளதாகவும், கூட்டாக இணைந்து செயற்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.
அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விடுபடாமல் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதனை தாம் கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தாம் வெளிநாட்டிலிருந்த காரணத்தினால் இது குறித்து தீர்மானம் எடுக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply