1160 ரூ. மில்லியன் செலவில் வடக்கு சுகாதார அபிவிருத்தி : ஜி. ஏ. சந்திரசிறி

வட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 1160 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன. 2011ம், 2012ம் ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தவென வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் ஊடாக வடபகுதியிலுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் புனரமைக்கப்படவுள்ள துடன், 20 வைத்திய சாலைகளுக்கான வெளி நோயாளர் பிரிவு (ஓ. பி.டி.) நிறுவப்படவுள்ளன.

அத்துடன் 12 மருத்துவ அதிகாரிகள் அலுவலகமும், 200 கட்டில்களைக் கொண்ட வார்ட் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, சுமார் 531 மில்லியன் ரூபா செலவில் பாரிய சுகாதார திட்டங்கள் இவ்வாண்டு முன் னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தற்பொழுது வடக்கின் பல்வேறு பகுதிகளில் 43 திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளும் உள்ளட க்கப்பட்டுள்ளன.

சுமார் 363 மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலைகள் புனரமைப்பு, பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அலுவலகம் நிர்மாணப் பணிகள், வாட் வசதிகள், விபத்துச் சேவைகள் பிரிவு, மருத்துவ அதிகாரிகளுக் கான விடுதிகள் போன்றன அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைக ளுக்கு 168 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வட பகுதியில் சிறந்ததொரு சுகாதார சேவையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply