கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியான தகவல்களையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
புதிய பாதுகாப்பு நடைமுறைக்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்லும் வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரியவருகிறது.
இதேவேளை, வெளிநாடு செல்லும் பயணிகள் மற்றும் அவர்களுடன் துணைக்குச் செல்பவர்கள் விமான நிலையத்துக்கு வெளியிலுள்ள சோதனைச் சாவடியில் இறக்கப்பட்டு அங்கிருந்து பேரூந்தின் மூலமே விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லையென கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று திரும்;பிய நபர் ஒருவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply