புலிகளின் முக்கிய உறுப்பினர் ஜெர்மன் விமானநிலையத்தில் கைது

ஜெர்மன் குடியுரிமைபெற்ற இலங்கைத்தமிழரான 35வதுடைய அகிலன் என்கிற புலி உறுப்பினர் ஜெர்மன் டுசல்டோவ் நகரில் வைத்து நேற்றையதினம் (புதன்கிழமை 03.11.10) அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த யூன் மாதம் இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிமித்தம் கைது செய்வதற்கான பிடியாணை பொலிசாருக்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர் ஸ்பெயின் மடஸ்கார் நகரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தங்கியிருந்ததாக தெரிய வருகிறது.

 
ஜெர்மன் அரசசட்டத்தரணியினரால் மடஸ்கார் நகர அதிகாரிகளுக்கு அகிலனை நாடுகடத்துமாறு கேட்கப்பட்ட நிலையில் அவர் ஜெர்மன் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply