மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் தீபாவளி கொண்டாட்டம் இல்லை

வடக்கே யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்கள் நிறைந்துள்ள வேளையில் நகரப்பகுதிகளில் பட்டாசுகள் கொளுத்தி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. எனினும், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பல பகுதிகளிலும், மனிக்பாம் முகாம் இடைத்தங்கல் தொகுதியிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை.

குறிப்பாக மனிக்பாம் முகாம் தொகுதியில் எஞ்சியுள்ள 20 ஆயிரம் பேரும் தமது சொந்த இடங்களுக்கு எப்பொழுது திரும்பிச் செல்வோம் என்ற எதிர்பார்ப்புடன் மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருக்கின்றார்கள். இதனால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கான மனநிலையும் இல்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் ஸோன் 4 எனப்படும் வலயம் நான்கு முகாமில் இருப்பவர்களை கதிர்காமர் முகாமுக்கு இடம் மாற்றுவதற்கு தீபாவளி பண்டிகைக் காலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதால் அங்குள்ளவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் ஓரடத்திலிருந்து மற்றுமோர் இடத்திற்கு இடம் மாற்றப்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும், அங்கிருந்து செல்வதானால், சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

இதேவேளை, இடைத்தங்கல் முகாமில் அடிப்படை வசதிகள் குறைவடைந்திருப்பதும், நிவாரண உதவிகள் பல நிறத்தப்பட்டிருப்பதும் தங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply