சரத் பொன்சேகாவிற்கு சலுகைகள் மறுக்கப்படவில்லை : சிறைச்சாலைகள் திணைக்களம்

சிறைச்சாலையில சரத் பொன்சேகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகளே சரத் பொன்சேகாவிற்கும் வழங்கப்படுவதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் கெனத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சரத் பொன்சேகாவிற்கு ஒரு கோப்பை தேநீர் கூட வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply