இந்திய – பாக். பேச்சுவார்த்தைக்கு ஒபாமா உதவ வேண்டும் : உமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்முவில் உமர் அப்துல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையிடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கா தலையிட வேண்டும் என்று நான் விரும்பவில்லை.

அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற அமெரிக்கா துணையாக இருந்து உதவ வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

கார்கில் ஊடுருவலின்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசினார். அதுபோல், பிரச்சினைக்குத் தீர்வு காண உதவ வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தால், திரைக்குப் பின்னால் இருந்து உதவலாம். இந்தியாவின் நிலையை பாகிஸ்தானை உணரச் செய்யலாம்.

டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் ஒபாமாவுக்கு அளித்த விருந்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, ஒபாமாவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். காஷ்மீர் பிரச்சினை பற்றி அவரிடம் விளக்கினேன். காஷ்மீருக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply