இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகளவு வட, கிழக்கு மாணவர்கள் : டலஸ்
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் போட்டியிடவுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. மேற்படி தேர்தல் நாடளாவிய ரீதியில் 332 தேர்தல் நிலையங்களில் நடத்தப்படும். முதல் அமர்வு டிசம்பர் 12ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறும்.
இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை பிற்பகல் வரை நடைபெறும். 332 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆயிரத்து 934 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையும் ” எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply