கிழக்கில் வெற்றிரமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன : விநாயகமூர்த்தி முரளிதரன்
அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ள வடக்கு கிழக்கில் உள்ள சில அரசியல் கட்சிகள் மக்களை மீண்டும் பலிகடாக்களாக மாற்ற முயற்சித்து வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் வெற்றிரமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வட பகுதி அடுத்த வருடத்திற்கு முழுமையாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் 75 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்து வருவது உண்மை. அவர்களை சட்டரீதியாக கைதுசெய்ய சிரமாக உள்ளது.
இந்திய அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வழங்கி வரும் உதவிகளை இதற்கு காரணம். இது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட ஏனைய அதிகாரிளுடன் பேசி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விநாயகமுர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply