ஈபிடிபி – சிறீ ரெலோ கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான சந்திப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO) ஆகிய கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் தொடர்பான முக்கிய சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள ஈபிடிபி தலைமைப் பணிமனையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமை, சுபீட்சமான வாழ்வு அனைத்திற்குமான செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஆட்கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதுடன் அதற்கெதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சந்திப்பில் ஈபிடிபியின் சார்பில் அதன் செயலாளர்நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, நிர்வாகச் செயலாளர் தோழர் புரட்சிமணி, தேசிய அமைப்பாளர் தோழர் கிபி, மற்றும் தோழர் குலம் ஆகியோர் பங்குபற்றியதுடன் சிறீ ரெலோவின் சார்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களான தோழர் உதயன், தோழர் கஜன், தோழர் சேனாதி ஆகியோர் பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி, ஊடக அறிக்கைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply