ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுக்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது : நடேசன்
கிளிநொச்சி நகர் இலங்கை படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடரும் என பிபிசிக்கு கருத்துத் தெரிவித்துள்ள புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், ஆயுதங்களை கைவிட்டுவிட்டு பேச்சுக்களுக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், விடுதலை போராட்டம் என்பது ஒரு நகரத்தின் வீழ்ச்சியில் தங்கியிருக்கவில்லை. நாங்கள் எமது மக்களின் ஆதரவுடன் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் மிக அதிகமான பிரதேசங்களை, நகரங்களை மீட்டெடுப்போம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது எதிர்காலத்தில் எங்கள் தாயகத்தில் அதிகமான பிரதேசங்களை மீட்டெடுப்போம் என்றும்.
நாங்கள் ஆயுதங்களை கையிலெடுத்தது எமது மக்களின் பாதுகாப்பிற்காக. அந்த ஆயுதங்களை எமது மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை கைவிட முடியாது. ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுக்கள் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply