ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பு நிகழ்வில் 150 வெளிநாட்டு அதிதிகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக 150 வெளிநாட்டு அதிதிகள் கலந்துக்கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக்கொள்ளும் வெளிநாட்டு அதிதிகளில் மாலைத்தீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர், சீன உப பிரதமர், பாகிஸ்தான் செனட் சபை உறுப்பினர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி உட்பட 150 அடங்குவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இவர்கள் நாளை இலங்கையை வந்தடைவார்கள் எனவும் அமைச்சர் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply