சம்பள உயர்வினை வழங்கினால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது : ஜனாதிபதி

சம்பள உயர்வினை வழங்கினால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினால் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்கள் ஸ்தம்பிதமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 100 ரூபாவினால் உயர்த்தினால் கூட மாதாந்தம் 1.4 பில்லியன் ரூபா செலவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்கத்தின் மொத்த வருமானம் 800 பில்லியன் எனவும், இதில் 500 பில்லியன் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களுக்காக ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்தக் கூடாது என தொழிற்சங்கத் தலைவர்கள் தம்மிடம் கோரியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
வரவு செலவுத்திட்டத்தில் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்கள் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply