நாடு கடந்த தமிழீழ இராச்சிய நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாமென அரசாங்கம் வெளிநடுகளிடம் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடு கடந்த தமிழீழ இராச்சிய நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என அரசாங்கம் வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பல நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் அமைச்சரவை அண்மையில் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சு உலக நாடுகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
 
ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக புலிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு சில நாடுகள் வழங்கி வரும் ஆதரவு பெரும் அதிருப்தி ஏற்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply