தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு யோசனை ஒன்றை தான் மனதில் உத்தேசித்து வைத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். இத்தீர்வு யோசனை அரசியல் கட்சிகளும், மக்களும் ஏற்று அங்கிகரிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், தனது மனதில் உள்ள அரசியில் தீர்வு அவர்களுக்கு முழுமையாக நன்மை பயக்காமல் இருக்கலாம் அதனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம். அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல. பொதுமக்கள் கூட மறுக்கலாம். மக்களின் மனதினுள் உள்ளவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவர்களுக்கு என்ன தேவை என்பதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதனால் ஒரு குழுவினை நியமித்து இருசாரர் தரப்பிலும் கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததுடன் 2011 ஆம் ஆண்டில் வடக்கு மாகணசபை தேர்தல் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது முதலாவது பதவிக்காலத்தில் தீவிரவாதத்தினை முற்றாக ஒழித்து, மக்களுக்கு நமாதானத்தை பெற்றுக் கொடுத்ததாகவும் இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டினை அபிவிருத்தி பாதையில் வழிநடத்திச் சென்று அதன்பின் மக்களின் மனதினினை முற்றிலும் வெற்றிபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை என்பது ஒரு தேசம், அதனுள் பிரிவுகள் இல்லை, ஆதலால் மக்கள் அனைவரும் சன்மானத்தினை பெற்றுக் கொள்ளவேண்டும் என அவர் தெரிலித்துள்ளார்.

த இந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply