ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் : சிவாஜிலிங்கம்
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பகிர்வு யோசனை அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக அரசியல் தீர்வுத் திட்ட யோசனையை தயாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் தீர்வுத் திட்டம் வரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈ.பி.டி.பி. உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகள் இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து நாளைய தினம் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு விசேட சந்திப்பொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply