நாட்டின் அபிவிருத்திக்கு வலுசேர்க்கும் வரவு செலவுத் திட்டம் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யும் சகல தரப்பினருக்கும் சலுகை வழங்கும் வகையில் 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஆகக் குறைந்தது 1200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அத்துடன் வர்த்தகத் துறையினர் நன்மைபெறும் வகையில் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை நாட்டின் அபிவிருத்திக்கு வலு சேர்க்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரி விலக்கின் மூலம் புதிய தொழில் முயற்சியாளர்கள் நன்மையடைவார்கள் என்றும் அவர் கூறினார். பொதுவாக பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வரவு செலவுத் திட்டம் என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

வே. இராதாகிருஷ்ணன் எம்.பி.

தேயிலை உற்பத்திக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமையால் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கைகொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்கள் நன்மைபெறக் கூடிய வாய்ப்பு இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கான பொறிமுறையொன்றை ஜனாதிபதி ஏற்படுத்துவார் என நம்புகிறோம்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

சகல துறைகள் குறித்தும் கவனம் செலுத்தி இந்த வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இவ்வாறு சகல துறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவில்லை.

எதிர்காலம் குறித்து இதனூடாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டு ள்ளது. நிதி அமைச்சருக்கு சகல துறைகள் குறித்தும் தெளிவு மற்றும் கவனம் இருப்பது இதனூடாக புலனாகிறது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன

மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றாது சகல துறைகளுக்கும் சலுகை வழங்கும் வகையில் புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயம், சேவை, சிறு, மத்திய கைத்தொழிற்துறை என சகல துறைகளிலும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதனால் தொழில் வாய்ப்பு கள் அதிகரிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் வறுமைநிலை மாறும்.

கடந்த 30 வருட காலத்தில் சமர்ப்பிக்கப் பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இந்த வரவு செலவுத் திட்டமே அபிவிரு த்தியை நோக்காகக் கொண்ட சிறந்த வரவு செலவுத் திட்டமாகும். இந்த வரவு செலவுத் திட்டத்தின் காரணமாக 2011ஆம் ஆண்டின் நடுப்பகுதியாகும். போது பொருளாதார எழுச்சி ஏற்படும்.

சம்பள உயர்வு போன்ற தற்காலிக தீர்வுகளின் நீண்ட கால நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் முன் வைக்கப் பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியுதீன்

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் போது மஹிந்த சிந்தனை தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கைத்தொழில், விவசாயம் என சகல துறைகளையும் அபிவிருத்தி செய்ய இத னூடாக பல திட்டங்கள் முன்மொழியப் பட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாடு துரித அபிவிருத்தி அடைவது உறுதி. சூழலுக்கு ஏற்றவாறு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டிருப்பது. வரவேற்கத்தக்கதாகும்.

அமைச்சர் விமல் வீரவன்ச

2011ல் ஆரம்பமாகும் புதிய ஆண்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையிலும் மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையிலும் இந்த வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சகல துறையினரையும் உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில் நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தவும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரிச்சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதோடு அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எமது முழு ஆதரவையும் வழங்குகிறோம்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்

2016ல் நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டதாக இந்த வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தியின் பலன்கள் சகலருக்கும் கிடைக்கும் வகையில் இது முன்வைக்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்க தாகும்.

அரசாங்க ஊழியர்களுக்கு 5 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதோடு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் 600 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. ஒய்வூதியக்காரர்களுக்கும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply