பாராளுமன்றத்தில் பிரதமரின் ஆசனம் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டது

பாராளுமன்றத்தில் இதுவரை காலமும் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த பிரதமருக்கான ஆசனத்தை ஜனாதிபதிக்கென ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அந்த ஆசனத்துக்கு இடது பக்கத்தில் உள்ள ஆசனத்தில் பிரதமர் தி.மு. ஜயரட்ண நேற்று அமர்ந்திருந்தார். அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் எந்த நேரத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்து அமர்வுகளில் கலந்துகொள்ள முடியும்.

இது வரை காலமும் பாராளுமன்றத்தின் புதிய தொடர் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் என்பவற்றில் பங்கு கொள்ளவே ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply