தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நாளை சந்திப்பு

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நாளைய தினம் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவை சந்திக்க உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமான ஆரம்பமாக கருத முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரசியல் தீர்வுத் திட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இடம்பெயர் மக்கள் பிரச்சினை, மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply