செஞ்சிலுவைப் பணியாளர் நல்லூரில் இன்று காலை சுட்டுக்கொலை

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரொருவர் இன்று (23) காலையில் யாழ்ப்பாணம் நல்லூரில் வைத்து சுட்டுக் கொல்லப்படடுள்ளார்.

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கங்காதரன் (32) என்பவரே இன்று காலையில் 7.30 மணியளவில் நல்லூர் கோயிலுக்கு சுமார் 125 மீற்றர் தூரத்தில் வைத்து இனந் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலைமை குறித்து ஆராயும் வகையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply