புதிய சனல் 4 காணொளி; இலங்கை உயர்ஸ்தானிகரகம் மறுப்பு
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இடம் பெற்ற போர் குற்ற செயற்பாடுகள் என ஔிபரப்பப்பட்ட காணொளியின், மேலதிக இணைப்பு காணொளியினை பிரித்தானிய சனல் 4 செய்திச் சேவை நேற்று ஔிபரப்பியுள்ளது. இக் காணொளிக்கு பிரித்தானியவில் அமைந்திருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகரகம் முற்றிலும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சனல் 4 இல் ஔிபரப்பப்பட்ட காணொளி தகவல் தொழவு நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட காணொளியென தெளிவுபடுத்தியிருந்தது எனவும், அது இனப்படுகொலை அல்ல சித்ததரிக்கப்பட்ட காட்சி என உயர்ஸ்தானிகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பிட்ட காணொளியில் 16 மாதங்களின் முன்பு சனல் 4 செய்திச் சேவையில் ஔிபரப்ப்பட்ட கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போன்ற தொகுப்பே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 வில் ஔிபரப்பப்பட்ட மேலதிக காணொளியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காட்சியின் பின்பு திருப்படும் கமராவில் குறைந்தது நிர்வாண நிலையில் 7 பெண்களின் உடல் தென்படுவதாகவும், இப் பெண்கள் கொலை செய்யப்படமுன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply