விடுதலைப் புலிகளுக்கு கள்ளக் கடவுச்சீட்டு விநியோகித்து வந்த கும்பல் ஸ்பெய்னில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட உலகின் தீவிரவாத இயக்கங்களுக்கு கள்ளக் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்த மிகப் பெரிய கும்பல் ஒன்றை சேர்ந்த ஏழு பேரை ஸ்பெய்ன் நாட்டின் Barcelona மாநகரத்தில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமை அதிகாலையும் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஆறு பேர் பாகிஸ்தானியர்கள். ஒருவர் நைஜீரியன். இவர்கள் கடவுச்சீட்டுக்களை திருடி தாய்லாந்துக்கு அனுப்பி வந்திருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், அல்-குவைதா தீவிரவாத இயக்கம், லக்ஷ்கார்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு இக்கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்துள்ளனர்.
இதே நேரம் இக்கும்பலைச் சேர்ந்த மூவர் தாய்லாந்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் பாகிஸ்தானியர். ஒருவர் தாய்லாந்துக்காரன். இப்பாகிஸ்தானியர்களில் ஒருவனும், தாய்லாந்துக்காரனுமே கும்பலின் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply