ஏற்றுக் கொள்ள கூடிய ஒரு விடயமா? ஜீ.எல்.பீரிஸ் கேள்வி
சுதந்தரமிக்க ஒரு நாட்டிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பிறநாட்டு ஜனாதிபதி ஒருவரின் உரை இரத்து செய்யப்பட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு விடயமா? என பிரித்தானிய ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். தற்போது நாட்டில் நிலவிவரும் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தற்போதைய சூழுநிலை குறித்தும், புலம்பெயர் சொந்தங்களின் அபிவிருத்தி பங்கு என்பது தொடர்பிலுமே ஜனாதிபதி உரையாற்ற இருந்ததாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் உரை பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அச்சுறுத்தல்களினாலும் இரத்து செய்யப்பட்டுள்ளது என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகசங்கம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான ஒருநாட்டிலே இவ்வாறனதொரு நிலை ஏற்பட்டமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply