ஜனாதிபதி உரையாற்றாமை பிரிட்டனுக்கே அவமானம்: அமைச்சர் கெஹெலிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அமெரிக்காவில் ஆரம்பித்தது இன்று வரையிலும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அந்த காலத்தில் சர்வதேசம் செய்ததை கரு எம்.பி. இன்று செய்கின்றார் என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார். ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரையாற்றாமை எங்களுக்கு அல்ல ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருப்பதாக கூறப்படும் பிரித்தானியாவுக்கு அவமானம், வெட்கமாகும் என்று அவர் சொன்னார்.

பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு சென்றிருந்த வேளையில் “வெள்ளைக் கொடி’ தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இன்று வரையிலும் யுத்தக் குற்றச் சாட்டு நகர்கின்றது. இறுதி யுத்தத்தின் போது 47 பேரைக் காப்பாற்றி நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. அது நடந்ததா? என்பது பிரச்சினையாகும்.

ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருக்கின்ற நாட்டில் பிரச்சினையில்லை, சந்தேகமும் இல்லை என்பதனால் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றார். அவர் அங்கு உரையாற்றாமை எங்களுக்கு அவமானமோ வெட்கமோ இல்லை.

புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்துள்ள போதிலும் பிரித்தானியாவில் புலிக்கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் யாருக்கு அவமானம் எங்களுக்கா? என அவர் கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply