தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால், அமெரிக்காவிலும் லண்டனிலும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது : சுரேஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படுமானால், பிரித்தானியாவில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிலைமைகள் ஏற்படாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போர் குற்றங்கள் இடம்பெறவில்லை என அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவோரை தேசத்துரோகிகள் என முத்திரை குத்துகின்றனர். ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள். தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டால், அமெரிக்காவிலும் லண்டனிலும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது எனவும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply