யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான சஜித் பிரேமதாசவின் கருத்து பாராட்டுக்குரியது : அரசாங்கம்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அண்மையில் வெளியிட்ட கருத்து பாராட்டுக்குரியது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
 
முன்னாள் தலைவர்களான டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க மற்றும் ரணசிங்க பிரேமதாச போன்ற தலைவர்களும் இதே போன்ற தேசப்பற்றுடைய நிலைப்பாட்டினைக் கொண்டிருந்ததாக மீன்பிடி வள அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
 
கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் கட்சி எதிர்காலத்தில் இன்னமும் தோல்விகளை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமை சஜித் பிரேமதாச மற்றம் கரு ஜயசூரிய ஆகியோரின் கருத்துக்களின் மூலம் தெளிவாகியுள்ளதென அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
சஜித் பிரேமதாசவின் கருத்துக்கு வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவும் அண்மையில் பாராட்டு வெளியிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply