இலங்கைக்யில் யுத்த குற்ற விசாரணை அவசியம் : மங்கள சமரவீர
சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை சரிபடுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால், சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளரை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு யுத்த குற்றவாளியென முத்திரை பதிக்க ஒருசில ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். அதேபோன்று எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பினை தடுப்பதற்கும் கூட ஒருசிலர் சூழ்ச்சி செய்கின்றனர்.
அவற்றிக்கு முகம் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம், கட்சி மறுசீரமைப்பின் பின்னர் ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஒருசிலர் எம்மோடு வந்து இணைந்து கொள்ள தீர்மானம் எடுப்பார்கள். என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply