ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5 நாடுகளில் வரிசையில் இலங்கை : மங்கள
உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்திற்கு சென்றிருப்பதாகவும் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5 நாடுகளில் வரிசையில் இலங்கை இடம்பெற்றிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையினதும் நாட்டின் தமலைவரினதும் தோற்றங்கள் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு சர்வதேசத்தின் மத்தியில் சீர்கெட்டு போயுள்ள சந்தர்ப்பத்தில், அதற்கான சரியான வழிமுறைகளை கையாள்வதற்கு பதிலாக அரசாங்கம் தனது இராஜதந்திர மற்றும் பொருளாதார இயலாமையை மூடி மறைப்பதற்காகவும் மக்களை திசை திருப்பி விடுவதற்காகவும் எதிர்க்கட்சிக்கு அரசியல் ரீதியாக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் மங்கள குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
லண்டன் விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்நோக்கிய சம்பவங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள வெட்கத்தை மறைப்பதற்காக, ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கான பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மீது சுமத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
அது மாத்திரமல்ல இலங்கை இழந்துள்ள நற்பெயரை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மிகவும் புத்திசாலிதனமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது அரசாங்கம் தேசத்துரோக முத்திரையை குத்த முயற்சித்து வருகிறது.
எனினும் உண்மையான தேசத்துரோகிகள் யாருடன் இருக்கின்றனர் என்றும் மக்கள் விரோதிகள் யார் என்றும் மக்கள் தெளிவாக அறிந்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 600 காவற்துறையினரை கொலை செய்த கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்;தின் முக்கிய அமைச்சராகவும் செயற்பட்டு வருகிறார்.
விடுதலைப்புலிகளின் தற்போதை தலைவர் கே.பி.என்ற குமரன் பத்மநாயன் அரசாங்கத்தின் அணுசரனையுடன் கொழும்பில், ஆடம்பர மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
நாட்டுக்காக உண்மையாக செயற்பட்ட சரத் பொன்சேக்காவை சிறையில் அடைத்து, நாட்டை உண்மையாக நேசிக்கும் கரு ஜயசூரிய மீது தேசத்துரோகி, இன துரோகி என முத்திரை குத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் நகரின் முன்னாள் மேயரும், தொழிற்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான கென் நிரிக்ஷன் பகிரங்க கூட்டமொன்றில், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ போர் குற்றவாளி என தெரிவித்திருந்தார்.
இது உலகம் மகிந்த ராஜபக்ஷ குறித்து என்ன பேசுகிறது என்ன செய்கிறது என்பதை வெளிப்படுதுகிறது. ‘அரசியல் கொள்கை முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்தில் இருந்து விலகிய தனக்கு 25 ஆண்டுகளாக நான் பழகிய நண்பரை சர்வதேச ரீதியில் போர் குற்றவாளி என முத்திரை குத்தும் போது, எனக்கும் துக்கம் ஏற்படுகிறது. 1989 ஆம் ஆண்டு நான், மகிந்தவுடன் இணைந்து, தாய்மார் முன்னணியை ஆரம்பித்து காணாமல் போனவர்களின் விபரங்களை திரட்டியதுடன் மகிந்த ராஜபக்ஷ அந்த தகவல்களுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்திக்க சென்றார்.
எனினும் மகிந்த ராஜபக்ஷ தனது கொள்கைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, இலங்கையை மனித உரிமைகள் மீறப்படும் நாடுகள் வரிசையில் முன்னணிக்கு இட்டுச் சென்றுள்ளார். அத்துடன் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் 5 நாடுகளில் வரிசையில் இலங்கையையும் இடம்பெற செய்துள்ளார்’ எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply