மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் அவசியமில்லை : கருணா

நாட்டு மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் அவசியமில்லை என பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஓர் சிறிய நாடு என்பதனால் மத்திய அரசாங்கத்தின் கீழ் அதிகாரங்கள் காணப்படுவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டின் சகல தமிழ் மக்களினதும் உரிமைகளை உறுதி செய்வதற்கு மாகாணசபை முறைமை ஒர் சிறந்த திட்டம் என்ற போதிலும், காவல்துறை அதிகாரங்கள் அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்றி வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வீணாக குற்றம் சுமத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் எந்தவொரு மூலையிலும் காணிகளை கொள்வனவு செய்ய தமிழ் மக்களுக்கு உரிமை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply