தமிழில் தேசிய கீதம் பாடத் தடையில்லை
தமிழ் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டவில்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கீதம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து சிறுபான்மை கட்சியினர் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பிலான எதுவித தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என நாட்டின் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் தொடர்பில் முகாமைத்துவ பொறுப்பாளர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார் ஏ.எப்.பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply