ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : கனடா
ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனேடிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 76 சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்குள் அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் ஓசியானின் லேடி என்ற கப்பலின் மூலம் குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் கனேடிய கரையோரத்தை அடைந்தனர். சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பற்றியோ அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தோ தகவல்களை வெளியிட முடியாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சன் சீ மற்றும் ஓசியானின் லேடி கப்பல்களின் மூலம் இலங்கையர்களை கனடாவிற்குள் கொண்டு சென்ற நபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply