சிறுபான்மை பெரும்பான்மை என செயற்படக்கூடாது: அசோக்க டி சில்வா
பல்லின சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் நாட்டில் நீதிபதிகள் அனைவருக்கும் சமனானவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அவர்களை பெரும்பான்மையினருக்கு சார்பாகவோ சிறுபான்மை இனத்தவர்களுக்கு சார்பாகவோ செயற்படக்கூடாது எனவும் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவிக்கின்றார்.சட்டம், நீதியை நிலைநாட்ட பாடுபட வேண்டியது நீதிபதிகளின் கடமையாகும் என்றும் நீதிபதிகள் எந்தவொரு கட்சியையோ தமது தனிப்பட்ட நலன்களையோ சார்ந்து செயற்படக்கூடாது என தெரிவித்துள்ளார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நீதிபதிகளுக்கான கருத்தரங்கு இன்று காலை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நீதிபதிகள் எந்தவொரு கட்சியையோ தமது தனிப்பட்ட நலன்களையோ சார்ந்து செயற்படக்கூடாது. அத்துடன் நீதிபதிகள் ஒருபோதும் பக்கசார்பாக இருப்பதும் நல்லதல்ல. தற்போது தோன்றியுள்ள பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து அதற்கொரு சிறந்த தீர்பை வழங்க வேண்டிய பொறுப்பே நீதிபதிகளுக்கு உள்ளது.
நீதிமன்றத்தால் வழங்ககூடிய தண்டனைகளுக்கு அப்பாற் சென்று பலர் தண்டனைகளை வழங்குகின்றனர். நான் அவர்களது பெயர்களை கூறவிரும்பில்லை. அபராதம் கூடுதலாக விதிக்கின்றனர். அது உண்மையிலேயே நல்லதல்ல. மக்களில் பலருக்கு சட்டம் தெரியும். நான் இந்த தவறை செய்தால் எனக்குரிய அபராதம் இவ்வளவு என்பதை நன்கறிந்த எத்தனையோ பேர் உள்ளனர்.
தனது குற்றத்துக்கு அபராதம் 5 ஆயிரம் ரூபா என தெரிந்த ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தால் என்ன நடக்கும்? 5 ஆயிரம் ரூபா அபராதம் என்றால் அவர் செலுத்திவிட்டு விடுதலையாவார். அதனைவிட அதிக அபாராதம் விதித்தால் அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்வார். அதனால் மேலும் 50 ஆயிரம் ரூபா செலவாகும். ஆகையால் நீதிபதிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். நீதிபதிகள் தமக்கு தேவையானதை செய்ய அல்ல இருக்கின்றார்கள்.
பிரச்சினைக்கான தீர்வை காணவே இருக்கின்றார்கள். பல்லின சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் நாட்டில் நீதிபதிகள் அனைவருக்கும் சமனானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பான்மையினருக்கு சார்பாகவோ சிறுபான்மை இனத்தவர்களுக்கு சார்பாகவோ செயற்படக்கூடாது. எனவே சட்டம், நீதியை நிலைநாட்டுவது நீதிபதிகளின் கடமையாகும். என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply