கொழும்பில் பாதுகாப்புக் கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் பிற்போடப்பட்டுள்ளது
கொழும்பில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கென பொருத்தப்பட்டிருந்த கமெராக்களை இயங்க வைக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட இருந்தபோதும் தற்போது பின் போடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் 29ம் திகதி முதல் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமெராக்கள் இயங்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குறித்த பாதுகாப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகள், சட்டவிரோதக் கும்பல்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கப்பம் பெறுவோர் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் ஆகியோர் கண்காணித்துக் கைது செய்யும் நடவடிக்கைகள் கண்காணிப்புக் கமெராக்கள் இயங்கத் தொடங்கியதும் இலகுவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்காணிப்புக் கமெராக்கள் இயங்கத் தொடங்கியதும் அதற்குப் பொறுப்பாக செயல்படுவதற்கும், கமெராக்களில் பதிவாகும் குற்றச்செயல்கள் தொடர்பாக கண்காணிப்பதற்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான விசேட பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்படவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply