எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் முகம் கொடுப்போம் – தியத்தலாவையில் ஜனாதிபதி

இலங்கை குறித்த எந்தவொரு சர்வதேச அழுத்தங்களுக்கும் முகங்கொடுக்க அரசாங்கத்திடம் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் அதனை நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் தியத்தலாவையில் தெரிவித்துள்ளார். இராணுவப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 253 உத்தியோகத்தர்களின் பயிற்சி நிறைவு வைபவம் தற்போது தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியமர்த்தி அப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர் தான் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக அர்த்தம். யுத்தத்தால் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கும் போராடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்தவர்களுக்கும் இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்” என அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply