தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க யாழில். கூட்டு ரோந்து
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமலும், பகலில் குறிப்பாகப் பெண்கள் தயக்கமின்றி நடமாட முடியாமலும் திண்டாடுகின்றார்கள்.
இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள உடுவில் தெற்கு மடத்தடி என்னும் இடத்தில் பதிவுத் திருமணம் இடம்பெற்ற வீட்டிற்குள் இரவு நேரம் புகுந்த கொள்ளையர் கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களைக் காட்டிப் மிரட்டி பதிவுத் திருமணம் செய்த இளம் பெண் உட்பட அங்கிருந்த ஏனைய பெண்களும் அணிந்திருந்த சுமார் 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
அதே தினத்தில் மானிப்பாய் ஆனந்தன் வீதியிலுள்ள வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் கைத் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஆறு பவுன் எடையு ள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் சங்கு வேலியிலுள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு இரவு நேரம் சென்ற கொள்ளையர் ஆயுதங் களைக் காட்டி பயமுறுத்தி ஆசிரி யரும் அவரின் தாயாரும் அணிந்தி ருந்த 10 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் கள்.
மேலும் பட்டப் பகலில் சண்டிலிப்பாய்ப் பகுதியில், வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிய கொள்ளையர், அப்பகுதி இளைஞர்களினால் துரத்திப் பிடிக்கப் பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டார்.
இதேபோல் சுதுமலையிலுள்ள மாப்பியன் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள் ளனர்.
கடந்த வாரம் சங்கானையிலுள்ள அந்தனர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற கொள்ளையர் அங்கிருந்த வர்களைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் கென்றுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் சங்கானைப் பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்ற கொள்ளையர், அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி முனையில் பயமுறுத்திப் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply